கிண்ணியா "திறன் அபிவிருத்தி நிலைய" முன்னேற்றம் குறித்து மாவட்ட செயலாளர் கள விஜயம்!

#SriLanka #Development #District #Lanka4 #ADDA #Kinniya #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
கிண்ணியா "திறன் அபிவிருத்தி நிலைய" முன்னேற்றம் குறித்து மாவட்ட செயலாளர் கள விஜயம்!

ஜனாதிபதியின் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் கிண்ணியா பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான "திறன் அபிவிருத்தி பகல்நேரப் பராமரிப்பு நிலையத்தின்" தற்போதைய முன்னேற்ற நிலைமைகளை ஆராய்வதற்கான விசேட கள விஜயமொன்று மேற்கொள்ளப்பட்டது.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் (மாவட்ட செயலாளர்) மாவட்ட செயலாளருமான டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் இந்த விஜயம் அமைந்திருந்தது. இதன்போது, தற்போது நிறைவுற்றுள்ள மற்றும் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் விரிவாக மேற்பார்வை செய்யப்பட்டன. 

தொடர்ந்து, நிலையத்தின் எஞ்சிய பணிகளை முழுமையாக நிறைவு செய்வதற்குத் தேவையான வேலைத்திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன், இந்த பராமரிப்பு நிலையத்தின் திறப்பு விழாவின் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் மற்றும் உத்தியோகபூர்வ ஏற்பாடுகள் குறித்து, சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் மாவட்ட அரசாங்க அதிபருடன் விரிவாகக் கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில் மாவட்ட பொறியியலாளர், கிண்ணியா பிரதேச செயலாளர், சமூக சேவைகள் திணைக்கள இணைப்பாளர், கிண்ணியா பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச சபை தலைவர் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களின் பொறுப்பு அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!